புதிய கல்வியாண்டில் முதல் வாரத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மூன்று மணி நேர விடுப்பு வழங்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.
பிள்ளைகளை காலதாமதமின்றி பாடசாலையில் சேர்ப்பதற்கு அல்லது அழைத்து வருவதற்கு அந்நேரத்தை பயன்படுத்த முடியும் என்று அந்நாட்டு மனித வள அமைச்சு அறிவித்துள்ளது.
பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் பெற்றோரின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்வதற்கு ஐக்கிய அரபு இராச்சிய அமைச்சரவை இவ்வதிரடி தீர்மானத்தை கடந்த வருடம் மேற்கொண்டது.
மேலும் பாடசாலை பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு அல்லது மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்வு என்பவற்றுக்கு முன்கூட்டி அனுமதி பெற்று செல்லக்கூடிய வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சிய மனித வள அமைச்சின் அரசாங்க மனித வளங்களுக்கான கூட்டாட்சி ஆணையத்தின் மகிழ்ச்சி மற்றும் நன்னடத்தை ஊக்குவிப்பு தேசிய திட்டத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கமைய இப்புதிய நடைமுறை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,