கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களின் 2017ஆம் ஆண்டுக்கான இடமாற்றப்பட்டியலை பிரதி பிரதம செயலாளர் நிர்வாக அலுவலகம் வௌியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலானது கிழக்கு மாகாணத்தில் உள்ள செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்கள் என அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) எ.எச்.எம் அன்சார் தெரிவித்தார்.
இடமாற்ற உத்தியோகத்தர்களின் மேன் முறையீட்டுக்கான காலம் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் காலதாமதமாக அனுப்பப்படும் முறையீட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் பிரதி பிரதம செயலாளர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே கோரப்பட்டிருந்த இடமாற்ற விண்ணப்பங்களுக்கமைய இடமாற்றச்சபையுடன் தயாரிக்கப்பட்ட இடமாற்றப் பட்டியலே அனுப்பப்பட்டுள்ளது என்றும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் அன்சார் மேலும் சுட்டிக்காட்டினார்.