எதிர்வரும் 25ம் திகதி 724 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாணச்சபை கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெ. தவராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், சிங்கள, மொழி மூல வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய, சிங்கள மொழி மூலமாக 617 பேரும் தமிழ் மொழி மூலமாக 107 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமையவே நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. வெற்றிடங்களுக்கு பொருத்தமான பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதனூடாக மாகாணக் கல்வித்தரம் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.