மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் சாரதிகள்

​ரயில் திணைக்கள லோகோமாடிவ் இயந்திர சாரதிகள் இன்று (24) மாலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளும் ஊழியர்களின் சேவைக்காலத்தை நீடிப்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையாக ஏற்கனவே அலுவலக ரயில் சேவை, மற்றும் இரு அதிவேக ரயில் சேவை என்பன ரத்து செய்யப்பட்டுள்ளன.

சிலாபம்- கொழும்பு, கல்கிஸ்ஸ- காங்கேசன்துறை மற்றும் கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- அததெரண/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435