உதவி தொழில் ஆணையாளர்களும் வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச சேவை தொழில் திணைக்கள ஊழியர்கள் சங்கத்திற்கு ஆதரவாக இன்று (19) களமிறங்கப் போவதாக உதவி தொழில் ஆணையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் ​போவதாக அறிவித்துள்ளனர்.

அதற்கமைய இன்று உதவி தொழில் ஆணையாளர்கள் சுகயீன விடுப்பு எடுத்துள்ளனர் என்று உதவி ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு பூராகவும் 57 உதவி தொழில் ஆணையாளர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில் தலைமை காரியாலயம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள 46 காரியாலயங்கள் செயற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமக்கு நியாயமான தீர்வு இன்றைய வேலைநிறுத்தத்தின் பின்னர் கிடைக்காத பட்சத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இன்றைய தினம் அரச தொழில் திணைக்கள ஊழியர்களுக்கு ஆதரவாக தொழில் அதிகாரிகள் சங்கம், சுயாதீன தொழிற்சங்க சங்க ஒருங்கிணைப்பு, மற்றும் மேலும் பல தொழிற்சங்கங்கள் திணைக்களத்தின் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகோதர இணையளதமான வெடபிமவிற்கு கருத்து தெரிவித்த சுயாதீன தொழில் சங்கத் தலைவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தொழில் அமைச்சரின் இயலுமை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பின் அதனை மறைத்துக்கொள்வதற்கு போலியான அரசியல் ஆளுமையை காட்டும், தொழில் திணைக்கள ஊழியர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள, ஓய்வுபெற்ற முதிய ஒருவரை திணைக்கள சேவைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் அதனூடாக வெவ்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதும் இப்பிரச்சினைகளுக்கு பிரதான காரணமாகியுள்ளது. தொழில் அமைச்சரின் நடவடிக்கையினால் தொழில் திணைக்கள செயற்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்பான செய்திகளுக்கு
தொடரும் தொழிலாளர் திணைக்கள ஊழியர் வேலைநிறுத்தம்
வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்புக- தொழில் திணைக்களம்
வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435