இலங்கை றப்பர் தொழில்நுட்பவியலாளர்கள் 25 பேர் பயிற்சி பெறுவதற்காக எதிர்வரும் 25ஆம் திகதி கேராள செல்லவுள்ளனர்.
கேரளாவில் உள்ள கொச்சின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்திலேயே இவர்கள் பயிற்சி பெறவுள்ளனர்.
இலங்கையின் மூன்றாவது ஏற்றுமதி வருமானப்பொருளாக காணப்படும் றப்பர் உற்பத்தி துறையில் பணியாற்றுவோர் பயிற்சியற்றவர்களாக காணப்படுகின்றனர். இது றப்பர் உற்பத்தித் துறையை வெகுவாக பாதித்துள்ளது. எனவே தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்பவியலாளர்களுக்கு பயிற்சி வழங்க இச்சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது என்று தொழிற்சாலை மற்றும் வணிக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் றப்பர் உற்பத்தித் துறையை நோக்கும் போது பெரிய மற்றும் சிறியளவில் வருடாந்தம் 485 பெரிய மற்றும் சிறிய அலகு றப்பர் உற்பத்தியில் 195 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான றப்பர் உற்பத்தி பயன்படுத்தப்படுகிறது.
எனவே இவ்வுற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் பெரியளவில் திட்டமிடவேண்டும். அதற்கமைய அரசாங்கம் 12- 25 திட்டங்களினூடாக றப்பர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகர், அரிண்டம் பக்ஜி, இலங்கையில் றப்பர் உற்பத்தி மேம்படுத்தப்பட்டால் உலகச் சந்தையில் மேலும் இடம்பிடிக்க முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பில் கலந்துரையாட எதிர்வரும் வாரம் குழுவொன்று இலங்கை வரவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வேலைத்தளம்