இனி பணிப்புறக்கணிப்பு இல்லையாம்- கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம்

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கப்போவதில்லை என நடத்தப்போவதில்லை என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் நேற்று (01) நடத்திய சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் கடந்த மாதம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தது.

இதன்போது, இராணுவத்தினரைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோக பணிகளை அரசாங்கம் முன்னெடுத்தது. அதுமட்டுமன்றி, எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து, வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டது.

இந்த நிலையில், ஜனாதிபதியுடன் பேச்சுநடத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த பணிப் புறக்கணிப்பை கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் கைவிட்டது.

இதற்கமைய, நேற்று ஜனாதிபதிக்கும் கனிய எண்ணெய் பணியாளர் தொழிற்சங்கத்துக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடனபடிக்கையை அமைச்சரவைக்கு மீள சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் டீ.ஏ.ராஜகருணா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வழங்கிய இந்த உத்தரவாதத்துக்கமைய, இனிமேல் பணிப்புறக்கணிப்புக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த ஜூலை மாதம் (29) ஆம் திகதி துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சுக்கும் சைனா மேர்ச்சண்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

எனினும், இந்த உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435