கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறீர்களா?

தொழில் நிமித்தம் கொரியா சென்று தொழில் நிலையத்தில் இருந்து வௌியேறி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடற்றுறை தொழில் நிமிததம் சென்று பலர் சட்டவிரோதமாக தங்கியுள்ளது தொடர்பில் தமக்கு அறியக்கிடைத்துள்ளதாகவும் எனவே கூடிய கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தென் கொரியாவில் கடற்றொழிற்றுறையில் தொழிலுக்கு சென்றவர்கள் தங்கள் தொழில் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக பணியகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை 600பேர் அளவில் இவ்வாறு தங்கள் தொழில் நிலையத்தில் இருந்து வெளியேறி சட்டவிரோதமான முறையில் தங்கியுள்ளனர்.
தென்கொரியாவுக்கு தொழிலுக்கு சென்று இவ்வாறு வெளியேறுவதால் இரண்டு நாடுகளுக்குமிடையில் மேற்­கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் தாக்கம் ஏற்­படும்.
மேலும் மலேசியாவில் தொழிலுக்காக பணியாட்களை சேர்த்துக்கொள்ளும் உத்தியோகபூர்வ அரச நிறுவனம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமாகும். மலேசியாவில் தற்­போது 500க்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்கள் எமக்கு கிடைத்துள்ளன. 3வருட கால ஒப்பந்தம் அடிப்படையில் தொழில் புரிவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

மலேசிய தொழில் வேலைத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக அங்கு செல்லும் 100பேரில் 47பேருக்கு விமான பயணச்­சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று (4) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்­பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் கலந்து கொண்டார்

அமைச்சர் தலதா அத்துகோரள மலேசிய அரசாங்கத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப் படையில் மலேசியாவில் தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதுடன் அதனை வருடாவருடம் அதிகரிப்பதற்கும் இணக் கம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435