சவுதி அரேபியாவில் நான்கு மாத சம்பளத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பணியாளர்கள் மீது நிறுவன வேன் மோதியதில் ஒரு தொழிலாளர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் ஜித்தா நகர் பகுதியில் அமைந்துள்ள மன்னர் அப்துல் அஸீஸ் விமானநிலையத்தின் திட்டமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவன ஊழியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நிறுவன அதிகாரி பலத்த காயமடைந்துள்ளார்.
குறித்த திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நான்கு மாதம் சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே அதனை கேட்டு ஊழியர்கள் கோபத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைக்கும் நோக்கில் கூட்டத்தை நோக்கி வாகனத்தை ஓட்டிய நிறுவன அதிகாரி இவ்விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து குறித்த அதிகாரியை தொழிலாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
வேலைத்தளம்/Gulffnews