
தற்போது அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள உதவி மருத்துவர்கள், தாதியர், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (22) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக உதவி மருத்துவர்கள், தாதியர், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் சுகாதாரதுறையின் 17 சேவைகளைச் சார்ந்த 50,000 அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சேவை நாடி வரும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் அவதியுறுகின்றமை குறிப்பிடத்தக்கது.