தமிழ் மொழி மூல பட்டதாரிகள் நியமனத்தை அதிகரிக்க கோரிக்கை

வட மத்திய மாகாண ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் செயற்பாட்டின்போது தமிழ் மொழி மூல பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சரும் கல்வியமைச்சருமான பேஷல ஜயரத்ன கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் சஹீட் தெரிவித்துள்ளார்.

நியமனங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதிலும் அதில் தமிழ் மூல பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தமையை கவனத்திற்கொண்டே மாகாண முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக மாகாணசபை உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 23ம் திகதி பட்டதாரிகளிடமிருந்து ஆசிரியர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதில் தமிழ் மொழி மூலமாக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்கள் குறைக்கப்பட்டு 367 பேருக்கு மட்டுமே ஆசிரியர் நியமனங்கள் வழங்க முடியும் என்று மாகாண அரச சேவை ஆணைக்குழு அறிவித்தது.

நியமனம் வழங்கும் நடவடிக்கையை தாமதப்படுத்தி, தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிட விபரங்களை உடனடியாக பெற்று அதற்கேற்ப ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாகாண முதலமைச்சரிடம் கோரியதாக மாகாணசபை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த மாதம் (ஓகஸ்ட்) தமிழ், சிங்கள மொழி மூல பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435