தென் கொரியா

அடிப்படைத் தகவல்கள்

தலை நகரம் : சியோல்
நேர இடைவெளி : + 3 ½ மணித்தியாலங்கள்
சுதந்திர தினம் : ஆகஸ்ட் 15
அரச கரும மொழி : கொரிய மொழி
நிதி அலகு : தென் கொரிய வொன்
சர்வதேச விமான நிலையங்கள்
• கிம்போ சர்வதேச விமான நிலையம்
• சியோல் – இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம்
• ஜேஜு சர்வதேச விமான நிலையம்
• கிம்ஹோ சர்வதேச விமான நிலையம்

காலநிலையும் வானிலையும்

தென் கொரியாவில் மிதமான காலநிலை காணப்படுகின்றது. இருப்பினும் கோடைக்காலப் பகுதியில் வெப்பநிலையானது வளிமண்டல ஈரப்பதன் 70 கும் அதிகமான பெறுமதியுடன் 45 பாகை செல்சியஸை விட உயர் மட்டத்தில் அமையக்கூடியதாகவுள்ளது. நவம்பர் மாதத்தில் இரவு நேரங்களில் வெப்பநிலையானது ஒரேயடியாக கீழிறங்கலாமென்பதோடு அது சைபீரிய காற்றுத் திணிவுகளின் காரணமாக சூனியத்தைவிட (0) குறைவடையலாம். கனமான ஆடைகளை எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமாக அமையலாம் என்பதோடு, அவ்வாறில்லாத பட்சத்தில் நீங்கள் கொரியாவிற்குச் சென்றதன் பின்னர் அங்குள்ள பாரியளவிலான ஆடை அங்காடிகளுக்குச் சென்று ஆடைகளைக் கொள்வனவு செய்யலாம். (வடக்கில் அமைந்துள்ள) சியோல் நகரத்தின் வானிலையானது பூசான் மற்றும் ஜேஜு நகரங்களின் வானிலையைவிட பெரிதும் வித்தியாசமாக அமையலாம் என்பதை கருத்திற்கொள்வது முக்கியமானது.

நான்கு பருவகாலங்களிலும் மிதமான வானிலை காணப்படுகின்றது. வருடத்தின் வெப்பநிலை அதிகமான காலப்பகுதியாக யூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மழை அதிகமான காலம் அமைந்துள்ளதோடு மிகவும் குளிரான காலப் பகுதியாக டிசெம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையிலான காலப்பகுதி காணப்படுகின்றது. இடைக்கிடை வருகின்ற வெப்பமண்டல காற்றானது தீவிரமான சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற நிலைமைகளைத் தோற்றுவிக்கின்றது. வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் சௌமிய மற்றும் அதிக உலர்த் தன்தையைக் கொண்டுள்ளதோடு அக்காலப் பகுதிகள் இரண்டும் கொரியாவில் விஜயம் மேற்கொளவதற்கு மிகவும் பொருத்தமான காலங்களாகக் கருத்தப்படுகின்றன.

தேவைப்படும் ஆடைகள்

கோடைக்காலத்தில் மென்மையான பட்டு ஆடைகளும் லினன் ஆடைகளும் அணியப்படுவதோடு வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலம் ஆகிய காலங்களில் மென்மையான மற்றும் சற்று பாரமான ஆடைகள் அணியப்படுகின்றன. குளிர் காலங்களில் சற்று பாரமான ஆடைகளும் கனமான ஆடைகளும் அணியப்படுவது பொருத்தமானது.

புவியியல்சார் விடயங்கள்

கொரியக் குடியரசானது (தென் கொரியா) ஒரு குடாநாடாகும். அது வடக்கிற்கு (சனநாயக மக்கள் கொரிய குடியரசினால் பிரிக்கப்படுகின்றதான) இராணுவம் சூனிய வலையத்திற்கும், கிழக்கு ஜப்பான் கடலுக்கும் (கிழக்குக் கடல்), தெற்கு (அது ஜப்பானிலிருந்து பிரிக்கப்படுகின்ற) கொரிய நீரிணைக்கும், மேற்கு மஞ்சள் கடலுக்கும் எல்லையாக அமைந்துள்ளது. கொரிய நீரிணையில் பல தீவுகளும் விரிகுடாக்களும் உள்ளன. அதன் மிகப் பெரிய தீவாகிய ஜேஜு -டூ எனப்படும் எரிமலைத் தீவு தென்மேற்கு கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ளதோடு தென் கொரியாவின் மிகவும் உயரமான மலையாகிய 1950 மீட்டர் (6397 அடிகள்) உயரமான ஹல்லா மலையும் அங்கு அமைந்துள்ளது. நாட்டின் அதிகளவான பகுதிகள் மலை மற்றும் சிகரங்களைக் கொண்டமைந்துள்ளதோடு 30மூ வீதமான சம தரையானது பெரும்பாலான மக்களின் குடியிருப்புப் பிரதேசங்களாகவும் செய்கை நிலங்களாகவும் காணப்படுகின்றது. பெரும்பாலான நதிகள் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மலைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமாகி மேற்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளை நோக்கி ஓடிச் சென்று மஞ்சள் கடலில் விழுகின்றன. நெக்டொன் நதியானது சியோல் நகரத்திற்குப் பின்னர் கொரியாவின் மிகப் பெரிய நகரமாக உள்ள பூசானில் தெற்குத் துறைமுகத்திற்கு அருகாமையால் கொரிய நீரிணையில் விழுகின்றது. கிழக்குக் கடற்கரையானது கடலுக்கு மேல் எழுந்து நிற்கின்ற மலைகளையும் கற்பாறைகளைக் கொண்ட பாதாளமான சரிவுகளையும் கொண்டமைந்துள்ளது.

தென் கொரியாவின் வரலாறு

முதலாவது ஐக்கிய கொரியாவானது கியோன்ஜுவை மையமாகக் கொண்ட சில்லா எனப்படும் பேரரசின் கீழ் உருவாகியதோடு அப்பேரரசானது கொரிய குடாநாட்டின் பெருமளவிலான பிரதேசத்தில் பரவியிருந்தது. அக்காலப் பகுதியில் கலை, கட்டிடக் கலை மற்றும் கலாசாரம் என்பன எழுச்சி பெற்றிருந்தது. இப்பேரரசானது கி.பி.870 களில் துண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்ததோடு அதன் விளைவாக கோயோ இராஜ வம்சத்திற்கு ஆட்சி உரித்தானது. கோயோ அரச வம்சமானது சீனாவின் சொங் அரச வம்சத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியது. (மேற்கத்தேய நாடுகள் அச்சுக் கைத்தொழிலை கண்டுபிடிப்பதற்கு இரண்டு தசாப்பதங்களுக்கு முன்னர் (அதாவது 1234 ஆம் ஆண்டு அச்சுக் கைத்தொழில்; கண்டுபிடிக்கப்பட்டமை உள்ளடங்களாக) கலாசார மற்றும் தொழில்நுட்பச் சமூகமொன்றை உருவாக்கும்போது கோயோ அரச வம்சமானது சொங் அரச வம்சத்தைப் பின்பற்றியது.

எவ்வாறாயினும் கொரிய குடாநாடு 1230 ஆம் தசாப்தத்தில் மொங்கோலிய இனத்தவருக்கு அடிமையானது. இருப்பினும், 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலப்பகுதியில் சீனாவின் மிங் அரச வம்சத்தின் உதவியோடு கொரியா மீண்டும் சுதந்திரம் அடைந்தது. 14 ஆம் நூற்றாண்டில் கோயோ அரச வம்சத்திற்குப் பின்னர் அரச அதிகாரத்திற்கு வந்த சோசன் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை கொரியாவை ஆட்சி புரிந்தது. சோசன் ஆட்சி காலத்தின் ஆரம்பக் காலப் பகுதியானது கோடிட்டுக் காட்டக்கூடிய வகையில் கலாசார மற்றும் புலமை எழுச்சி ஏற்பட்ட காலப் பகுதியாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும் கொரியாவானது முதலாவதாக ஜப்பானினதும் பின்னர் சீன மாங்சு அரச வம்சத்தினதும் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளானது. அந்த வகையில் கொரியா சீனாவின் ஆட்சிக்கு உள்ளானதோடு அதன் பெறுபேறாக அது சுமார் 200 வருடங்களாக சீனப்பேரரசின் அங்கத்துவ நாடாக இருந்து வந்தது. இன்று நீங்கள் பார்வையிடுவதற்காகச் செல்கின்ற மத வழிபாட்டுத் தளங்கள், மாளிகைகள், மத வணக்கஸ்தளங்கள் அனைத்தும் போலவே முற்காலத்தில் தீக்கிரையாக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்ட ஆரம்ப மாதிரிகளின் சிதைவுகளின் மீது மீள் நிர்மாணம் செய்யப்பட்டவைகளேயாகும்.

இரண்டாம் ஆம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் ஜப்பானுக்குச் சொந்தமாக இருந்த காலணித்துவ நாடுகள் அதிலிருந்து அகற்றப்படும்போது கொரியாவை வட அகலாங்கு 380 ஊடாகப் பிரிப்பதற்கு சோவியத் ரஷ்யாவும் அமெரிக்காவும் இணக்கத்துக்கு வந்தது. பனிப்போரின் ஆரம்பத்தோடு சோவியத்தும் அமெரிக்காவும் நேருக்கு நேர் சந்திக்கின்ற சில இடங்களுக்கு மத்தியில் ஒன்றாக அமைந்திருந்த கொரியாவின் ஆட்புலமானது யுத்தம் மூழும் சுழ்நிலை நிறைந்து காணப்பட்ட ஒரு இடமாக மாறியது. 1950 இல் இரு தரப்புக்கு மத்தியில் பாரிய யுத்தம் எழுகின்ற சந்தர்ப்பம் வரை தேச எல்லைகளுக்கிடையிலான ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்த வண்ணம் காணப்பட்டன.

அதன் பின்னர் ஆரம்பமாகிய மூன்று வருடகால யுத்தத்திற்காக இரு தரப்பினரும் தமக்கான அனைத்துச் சக்திகளையும் பயன்படுத்தியதோடு பாரியளவிலான அணு சக்தி பிரயோக யுத்தமாக மூழுக்கூடிய வரை வளர்ச்சியடைந்தது. 1953 ஆம் ஆண்டளவில் தற்காலிக போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டது. (எவ்வாறாயினும் யுத்தம் ஒருபோதும் உத்தியோகபூர்வ முடிவினை நோக்கி கொண்டு செல்லப்படவில்லையென்தோடு நடைமுறை ரீதியாக பார்க்கும் போது இரு நாடுகளும் இன்னமும் யுத்தம் செய்துகொண்டுள்ளன.) அதன் பின்னர் எட்டிய மூன்று தசாப்தங்கள் பூராகவும் வட – தென் கொரிய இராச்சியங்கள் பனிப்போரில் ஈடுபட்டு ஓருவருக்கொருவர் எதிரான இரு அதிகார முகாம்களில் இறுகிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் பயணித்தனர். தென் கொரியாவானது வெற்றிகரமான முதலாளித்துவ பொருளாதாரத்தை தாபித்ததோடு அதன் இன்றைய மொத்தத் தேசிய உற்பத்தியானது 1 ட்ரிலியன் டொலர்களாகும்.

எவ்வாறாயினும் 1980 ஆவது தசாப்பதத்தின் ஆரம்பக் காலப்பகுதி வரை கோடிட்டுக் காட்டக்கூடியளவு விவேகமான அரசியல் முறைமையொன்றை தாபித்துக்கொள்வதற்கு தென் கொரியா தவறியது. அதற்கு முன்பதாக தென் கொரியாவானது சில சிவில் மற்றும் இராணுவ சர்வாதிகளால் ஆட்சி செய்யப்பட்டதோடு அவர்களுடைய ஆட்சி காலத்தில் எதிர் அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தோர் சிறையிலிடப்பட்டனர். ஆயினும், அச்சந்தர்ப்பத்தில் சனநாயக நீதி என்ற கட்சியினுள் அதிக அதிகாரத்தைக் கொண்டிருந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் அப்போது நிலவிய தான்தோன்றித் தனமான அரசியல் ஆட்சியில் ஒரு தளர்வுத் தன்மை தேவையென்பதைப் புரிந்து கொண்டனர். 1981 ஆம் ஆண்டு மார்ஷல் சட்டம் அகற்றப்பட்டதோடு ஐந்து வருட காலப் பகுதியில் எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்த கிம் டே – யுங்கின் தலைமையில் புதிய கொரியா சனநாயகக் கட்சியின் கீழ் பலமான பாராளுமன்ற எதிர்க் கட்சி உருவானது. இருப்பினும் 1997 ஆம் ஆண்டே டே யுங்கினால் சானாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட முடிந்தது.

2002 ஆம் ஆண்டு ஜப்பானுடன் இணைந்து உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இணை உபசார நாடாக செயற்பட்டதன் காரணமாக தென் கொரியாவின் சர்வதேச ரீதியான நற்பெயர் மற்றும் தேசிய உள தைரியம் என்பன அதிகரித்தன. அக்காலப் பகுதியில் அரசியல் ஊழல் காரணமாக மேற்படி நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படக்கூடியதொரு நிலைமையும் காணப்பட்டது. குற்றப் பிரேரணைக்கு உள்ளாகி அதன் பின்னர் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் சனாதிபதி றோ மூ ஹைன் அவர்களுக்குப் பின்னர் ஆட்சிபீடம் ஏறிய லீ மியுங் பக் அவர்கள் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் சனாதிபதியாக பதவி வகித்து வருகின்றார்.

வடக்கு – தெற்குத் தொடர்புகள் ஓரளவு வளர்ச்சியடைந்து வந்த ஒரு சந்தர்ப்பத்தில் 2010 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தென் கொரிய யுத்தக் கப்பலொன்றை மூழ்கடிக்கச் செய்தல் ( மற்றும் அதிலிருந்த 46 மாழுமிகள் மரணமடைதல்), அண்மித்த நகரங்களுக்கு வட கொரியாவினால் குண்டு வீசப்படுதல் என்பன வட – தென் கொரிய இராச்சியங்கள் மீண்டும் இணைவது தொடர்பாக காணப்பட்ட எதிர்பார்ப்புக்கள் தற்காலிகமாக குற்றுயிராவதற்கு காரணமாக அமைந்தன.

தென்கொரியாவில் சுற்றுலாவில் ஈடுபடுகின்றவர்களுக்கு கூறப்பட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், கொரியாவின் அண்மைக்கால வரலாறும்; பண்டையகால வரலாறும் இன்றைய தென் கொரியாவுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் கொண்டுள்ளதனால் அது தொடர்பாக பெரும்பாலான கொரியர்கள் பெரும் அபிமானதைக் கொண்டுள்ளனர் என்பதாகும்;.

தென் கொரியாவின் கலாசாரம்

மதம்: தென்கொரியாவானது உலகின் அதிகளவு சம இன மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இருப்பினும் மதம் என்று நோக்கும்போது 29.2மூ வீதமான மக்கள் கிறிஸ்தவர்களாகவும் 22.8மூ வீதமான மக்கள் மரபு ரீதியான பௌத்த மதத்தையும் பின்பற்றுவதோடு 46.5 வீதமான மக்கள் எந்தவொரு மதத்தையும் பின்பற்றுவதில்லை. சாதாரணமாக கொன்பியுசியன் சித்தாந்தம் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படுவதோடு கடவுள்களை வழிபடுதல், பிசாசுகள், கண்களுக்குப் புலப்படாத சில சக்திகள் என்பவற்றின் மீதான நம்பிக்கை மிகவும் ஆழமாக வேறூன்றியுள்ளது. சியோன்டோகியொ எனப்படுவது டாவோ வாதம், கொன்பியுசியஸ் வாதம் மற்றும் கிறிஸ்தவ மதம் என்பவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ள ஒரு கொரிய மதமாகும். அங்கே இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்ற சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகையொன்று காணப்படுகின்றது.

தென் கொரியாவில் பேசப்படும் மொழி

ஆங்கில மொழியுடன் கொரிய (ஹன்குல் -Hangul) மொழி பாடசாலைகளில் பரவலாக கற்பிக்கப்படுவதோடு அது பிரதான நகரங்களில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் மொழியாகவும் அமைந்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435