தொழிலாளர் விடயத்தில் அரசாங்கம் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலும், தொழிலாளர்கள் விடயத்தில் இந்தத் தேர்தலின் தாக்கம் எவ்வாறுள்ளது என்பது தொடர்பிலும், தொழிற்சங்;க பிரமுகர்களிடமும், தொழிலாளர்களிடமும் ‘வேலைத்தளம்’ நேர்காணலை மேற்கொள்கின்றது.

இன்றைய நேர்காணலில் மலையக தொழிற்சங்கமான மலையக மக்கள் முன்னணியின், செயலாளர் அ.லோரன்ஸ் எம்முடன் இணைந்து கொண்டார்.

கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?

பதில் – மக்களின் தேசிய பிரச்சினை தீர்க்கப்பட்டு, பொருளாதார ரீதியாக அவர்கள் முன்னேற்றமடையாலம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும், ஜனாதிபதியும், பிரதமரும் தமது கட்சிகளை பலப்படுத்த முயற்சி செய்ததன் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இதன்காரணமாக மக்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளனர். இது முழு இலங்கையிலும் நடந்துள்ளது.
கேள்வி – தேர்தலின் பின்னர் எவ்வாறான மாற்றம் நிகழ வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில் – ‘வேலைத்தளம்’ என்பதன் அடிப்படையில் தொழிலாளர்கள் தொடர்பாக பார்க்கும்போது, தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள நிலுவை பிரச்சினை என்பது மக்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தமது ஆட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின், மக்களுக்கான செயற்பாடுகளையும், தொழிலாளர்கள் விடயத்திலும் அரசாங்கம் மாற்றங்களுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கேள்வி – தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் தொழிலாளர் ரீதியாக உங்களுடைய எதிர்ப்பார்ப்பு என்ன?

பதில் – தொழிலாளர்கள் என்ற ரீதியில் பார்க்கும்போது குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டு அமைப்பு என்பனவே ஆணை வழங்கப்பட்ட தரப்பாக உள்ளன. அவைதான்; இந்த விடயத்தில் செயற்பட வேண்டும்.

கூட்டு உடன்படிக்கைக்கு வெளியில் உள்ள தரப்பாக நாம் (மலையக மக்கள் முன்னணி) ஒரு அழுத்தக் குழுவாகவே உள்ளோம்.  எனவே, தோட்டத்  தொழிலாளர்களைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பினராக வரும்வரை ஒரு அழுத்தக் குழுவாகவே எம்மால் செயற்பட முடியும்.

– என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் , நாயகமுமாக அ.லோரன்ஸ்.

இதேவேளை, இந்த விடயங்கள் தொடர்பில் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினரான தொழிலாளர் ஒருவரும் எம்மிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பின் காரணமாக நாட்டு மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் அன்றாட வாழ்வில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அத்தியாவசியமானதாகும்.
அத்துடன், தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பிலும் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவரின் கருத்தாக அமைந்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435