மருத்துவரீதியாக தகுதி பெறாதவர்களுடைய வாகன அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்ய டுபாய் அரசு தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு வீதி மற்றும் போக்குவரத்து அதிகாரசபையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வாகனம் ஓட்டிச் சென்ற போது சாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதையடுத்து ஏற்பட்ட விபத்தில் , இருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்ததையடுத்தே அந்நாட்டு அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
தற்போது தொழில்ரீதியாக சாரதியாக பணியாற்றுபவர்கள் ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை செய்து தகுதியானால் மட்டுமே தொழிலை தொடர முடியும்.
லொறி, பஸ், மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர்களுக்கே இச்சட்டம் செல்லுபடியாகிறது.
புதிய சட்டத்திற்கமைய, வலிப்பு, உயர் இரத்த அழுத்தம், , இதய நோய், நீரிழிவு, டிமென்சியா மற்றும் உளநோய்கள் உள்ளவர்கள் சாரதிகளாக பணியாற்ற அனுமதி வழங்கப்படாது.
வேலைத்தளம்