குவைத்திலிருந்து சட்டவிரோதமாக தனது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அந்நாட்டில் வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரியை தவிர்ப்பதற்காக சட்டவிரோமான முறையில் பணவைப்பு செய்ய முயல்கின்றவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 10,000 குவைத் டினார் அபராதமும் விதிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குவைத்தில் கடந்த 5 வருட காலப்பகுதியில் மட்டும் 19 பில்லியன் நிதி வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டு வருட வரவுசெலவு நிதி ஒதுக்கீட்டுக்கு சமனாகு. இதனையடுத்து இப்பண வைப்பினூடாக நாட்டுக்கு வருடமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய வரிவிதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வரி விதிப்பை தவிர்ப்பதற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சட்ட விரோத வழிகளை நாடாதிருப்பதற்காக புதிய சட்டங்களும் அமுல்படுத்தப்படுகின்றன.
புலம்பெயர் தொழிலாளர்கள் இது குறித்து தெளிவு பெற்றிருப்பதுடன் தண்டனை மட்டுமன்றி நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றும் அபாயமும் காணப்படுவதனால் கவனமாக நடந்துகொள்வது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்