வீட்டுப்பணிப்பெண்களாக சென்று உயிரிழந்தோர் பற்றிய தகவல் கோரல்

இலங்கையிலிருந்து லெபனான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக சென்று உயிரிந்த 3 பெண்கள் தொடர்பான விபரங்களை வழங்கி உதவுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரங்கள் வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவுக்கு வழங்கிய தகவல்களுக்கமைய இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லெபான் சென்ற இஹல மொஹொட்டிமுல்ல, குருகேவத்த, முஜ்ஜன்கமுவ என்ற முகவரியைச் சேர்ந்த கலுவகே அசிலின் ( டிங்கிரியலாகே அசிலின்- கடவுச் சீட்டு இலக்கம N- 3662097), சவுதி சென்ற இலக்கம் 10, கெடெல்ல, தங்கொட்டுவ என்ற முகவரியைச் சேர்ந்த பிரிஸ்கே சந்திரிக்கா பிரியந்தி மற்றும் லெபனான் சென்ற ஹேவா தொன்சலாகே பத்மலதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பெண்கள் தொடர்பில் விபரங்கள் தெரிந்தவர்கள், நெருங்கிய உறவினர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு நேரடியாக வருகைத்தந்தோ அல்லது 011 2437635/ 0115668634 என்ற முகவரியுடனோ தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435