கொரிய மொழி பரீட்சைக்கான தினம் மற்றும் பரீட்சை நிலையம் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று பணியகம் அறிவித்துள்ளது.
கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அண்மையில் நாடு பூராவும் உள்ள மத்திய நிலையங்களில் விநியோகிக்கப்பட்டது. பரீட்சைக்கான திகதியும் நிலையமும் விரைவில் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது 27ஆம் திகதி இணையதளத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரிய மொழி பரீட்சை தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் காத்திருப்பது அவசியம். இது தொடர்பில் உங்களுக்கு தகவல் வழங்க வேலைத்தளம் காத்திருக்கிறது.
வேலைத்தளம்