குவைத் சர்வதேச விமானநிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

குவைத் சர்வதேச விமானநிலையத்தின் பாதுகாப்பு பிரிவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விமான நிலைய பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன் கடுமையான சோதனை நடடிவக்கைகளையும் மேம்படுத்தியுள்ளது.

விமானநிலைய நுழைவாயிலிருந்து பிரயாணப்பைகளை விமானத்தில் ஏற்றும் வரையில் சோதனையிடப்படுகின்றது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூன்று கட்டமாக சோதனைகள் நடத்தப்படுகின்றன.

குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கும் விமானங்கள் கடுமையாக சோதனையிடப்படுகின்றன. அண்மையில் எகிப்து விமானம் விபத்துக்குள்ளானமை இதற்கு பிரதான காரணமாகும். அத்துடன் தீவிரவாத தாக்குதல்களில் இருந்த குவைத்தை பாதுகாப்பதும் இதன் நோக்கம் என்று குவைத் விமானநிலைய பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் புலம்பெயர் பயணிகள் இதுகுறித்து கவனமாக இருப்பதுடன், அவசியமான அனைத்து ஆவணங்களையும் எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதுடன் பயணப் பொருட்களை கொண்டு செல்லும் போது கூறப்பட்டுள்ள சட்ட திட்டங்களை பின்பற்றுமாறும் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

உரிய சட்ட திட்டங்கள் பின்பற்றப்படாத பட்சத்தில் பயணத்தடைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிவருவதுடன், சட்ட சிக்கல்களையும் எதிர்நோக்கவேண்டிவரலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435