இந்த ஆண்டு போலி ஆவணங்கள் வைத்திருந்த 5,514 பேர் கைது

இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் வர முயற்சி செய்த 5,514 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகம் கடந்த வாரம் அறிவித்துள்ளது.


அடையாள மற்றும் மோசடி ஆவணங்கள் நிபுணத்துவம் மையத்தின் தகவலுக்கமைய கடந்த 2015ம் ஆண்டு 53,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களின் ஆவணங்கள் டுபாய் சர்வதேச விமானநிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு 47,910 பயணிகளின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இப்பரிசோதனைகளின் போது நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் எல்லை பாதுகாப்பு கருதியே போலி ஆவணங்கள் தொடர்பில் கவனமாக இருப்பதாகவும் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அஹமட் அல் மெர்ரி தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435