கட்டாரில் பாதுகாப்பற்ற கட்டுமானப்பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலக்கிண்ண போட்டி நிமித்தம் கட்டாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 362 அறைகளைக் கொண்ட ஹில்டன் ஹோட்டல் நிர்மாணப்பணிகளின் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த 12 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என்று சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நவீன யுகத்துக்கமைய சட்ட மற்றும் இருப்பிட பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு கட்டார் அரசிடம் கோரியுள்ள சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷாரன் பர்ரோவ், கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இதுவரையில் எத்தனை தொழிலாளர்கள் இறந்துள்ளனர் என்பது தொடர்பான தரவுகளை வெளியிட தவறியுள்ளது என்றும் சுட்டிகாட்டியுள்ளார்.

கட்டார் அரசின் பாராமுகத்தை சாதகமாக பயன்படுத்தி, ஹில்டன் போன்ற தனியார் நிர்வாகங்களும் தொழிலாளர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருடைய நலன் குறித்து குருடனைப் போல் பாராமுகமாய் இருப்பது கவலைக்குரிய விடயம் என்று தெரிவித்துள்ள பொதுச் செயலாளர், அந்நாட்டைச் சேர்ந்த பல கல்விமான்களும் பொதுச்சேவை மனமுள்ளவர்களும் பாதிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்களை மீட்டு உதவி வழங்குகின்றனர். எனினும் அவ்வாறு உதவி வழங்குகின்றவர்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களும் கைது செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் நீதி நியாயத்தை எதிர்பார்ப்பதும் மிகவும் கடினமான செயல்தான். கட்டார் சட்டம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது. தொழிலாளர் உரிமைக்காக குரல் எழுப்ப உரிமையோ, தொழிற்சங்க பிரதிநிதிகளோ அங்கு இல்லை.

கட்டுமானத் தொழிலுக்காக வரும் தொழிலாளர்கள் காயமடைவதனாலும் அதற்கான நட்டஈடு வழங்கப்படுவதனாலும் நிர்மாண கம்பனிகள் மற்றும் பல்தேசிய கம்பனிகள் நட்டத்தையே எதிர்நோக்குகின்றன.

இதில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றொரு பக்கமும் உள்ளது. வாழ்க்கை தரம் மிகவும் மோசமாக உள்ளமையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான தங்குமிட வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்காமல் மேலதிக தொழிலாளர்களை பணியில் இணைத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு கட்டார் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435