ஊதிய முரண்பாடுகளை நீக்குமாறு கோரி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்று சுகவீன விடுமுறையில் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பணிப்புறக்கணிப்பு நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்ற செயற்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்கள் தேவையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருவதாக அரசாங்க தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவான முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தலைமையிலான தாதியர் சங்கம் நேற்று முன்தினம் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டடம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.