பணியக நிதி மோசடி குறித்த இடைக்கால அறிக்கை கையளிப்பு

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று (23) கையளிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி தொடர்பாக ஆராய்வதற்கு சட்டத்தரணிகளான ரகித்த அபேகுணவர்தன, துஷமந்த தொட்டவத்த, துஷாரி சூரிய ஆராச்சி ஆகியோரை அங்கத்தவர்களாக கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது.

அந்தக்குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரடனவிடம் நேற்று தமது இடைக்கால அறிக்கையை கையளித்தது.

இதன்போது அமைச்சின் செயலாளர் எஸ்.அருமைநாயகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435