கட்டான பகுதியிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (21) 11 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பட்டாசு தொழிற்சாலை தீப்பிடித்ததில் அங்கு கடமையாற்றிய 65 வயதான பாதுகாவலர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.