தொழில் வாய்ப்பை பெறும் பட்டதாரிகள் பெயர்கள் வௌியாகின!

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் இன்று (17) அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பெயர் விபரங்களை http://www.pubad.gov.lk/ என்ற இணையதளத்தில் பிரவேசித்த பார்வையிடலாம்.

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் இன்று தொடக்கம் குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

தொழிலற்ற பட்டதாரிகளுக்காக 50,000 தொழில் வாய்ப்புகளும், மிகுதி ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளுக்காக பொருத்தமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435