ஆர்ப்பாட்டத்தினால் இழக்கப்பட்ட மனிதநாட்கள்

2019ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இடம்பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக 54,919 மனிதநாட்கள் இழக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெருந்தோட்டத்துறை 51.4 சதவீதத்தினையும் அரசுசார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்கள் 48.6 சதவீதத்தினையும் கொண்டிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையின் வீழ்ச்சியினால் தனியார் துறையில் தொழிலாளர் உறவுகள் 2018 உடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகரித்திருந்தது.

எனினும், ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இழக்கப்பட்ட மனிதநாட்களின்
எண்ணிக்கை 2018 உடன் ஒப்பிடுகையில் கரிசனைக்குரிய காலப்பகுதியில் 10.7 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

தொழிலாளர் திணைக்களத்தினால் பதியப்பட்ட தரவின்படி, பெருந்தோட்டத் துறையில் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இழக்கப்பட்ட மனிதநாட்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019இல் அதிகரித்த ஆர்ப்பாட்டங்களின் காரணமாக மனிதநாட்கள் இழக்கப்பட்டாலும், அரசசார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்கள், ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பன வீழ்ச்சியடைந்தன.

6,952 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் – 54,919 மனிதநாட்கள் இழப்பு

2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் துறை கைத்தொழில்களால் பதிவிடப்பட்ட மொத்தம் 18 ஆர்ப்பாட்டங்களில் 07 பெருந்தோட்டத்துறை தொடர்பானதும் ஏனையவை அரசுசார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்கள் தொடர்பானவையாகும்.

2019இல் ஒட்டுமொத்தமாக 6,952 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், பெருந்தோட்ட துறையில் 28.1 சதவீதமாகவும் அரசுசார்; நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்களில் 71.9 சதவீதமாகவும் காணப்பட்டது.

இதேவேளையில், 2019ஆம் ஆண்டுகாலப்பகுதியின் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக இழக்கப்பட்ட மொத்தம் 54,919 மனிதநாட்களில் பெருந்தோட்டத்துறை 51.4 சதவீதத்தினையும் அரசுசார் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தனியார் நிறுவனங்கள் 48.6 சதவீதத்தினையும் கொண்டிருந்தன.

சுகாதாரம், சுங்கம், அஞ்சல், கல்வி மற்றும் போக்குவரத்துறை ஆர்ப்பாட்டங்கள்

இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு மேலதிகமாக, நாட்டின் சமூக மற்றம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நாளாந்த வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்த சுகாதாரம், சுங்கம், அஞ்சல், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் நடைபெற்ற பல எண்ணிக்கையான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக பகிரங்கமாக கிடைக்கத்தக்கதாகவுள்ள தரவுகள் வெளிப்படுத்தின.

2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் தொழில்துறை இணக்கப்பாட்டினை அதிகரித்துக்கொள்வதற்கு தொழில்நிலை, தொழிலாளர் உறவுகள் மற்றும திறன் விருத்தி அமைச்சினால் பல வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்ப, தேசிய தொழிலாளர் ஆலோசனைச் சபையின் கூட்டங்களின் போது, குறைந்தபட்ச கூலியினை 2,500 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பணியாட்களுக்கான 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தினையும் தொழிற்சங்க நிறுவனத்தொகையயை ஓர் அங்கீகரிக்கப்பட்ட கழிவாக்குவதற்கு 1941ஆம் ஆண்டு 27ம் இலக்க ஊதியங்கள் சபை கட்டளைச்சட்டத்தினுடைய பிரிவு 2 (அ) இனை திருத்தியமைப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அது மேலும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் கூலிகளினை தீர்மானிப்பதற்கான பொறிமுறை ஒன்றினையும்
நிறுவுவதற்கு முன்மொழிந்திருந்தது. மேலும் 1930ஆம் ஆண்டின் கட்டாயமாக்கப்பட்ட தொழிலாளர்; ஒப்பந்தத்திற்கான (சி-29) 2014,ன் நெறிமுறை 29 இற்கு இலங்கை ஒப்புதலளித்துள்ளது.

இது ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதிலுள்ள இ,டைவெளியினை நிவர்த்தி செய்வதற்கும், செயற்றினான மற்றும் நிலைத்துநிற்கக்கூடிய முறையில் கட்டாயமாக்கப்பட்ட அல்லது கட்டாய தொழிலாளர்களினுடைய தொடர்ச்சியான அடக்குமுறை தொடர்பான வழிமுறைகளயும் வலுவூட்டுவாற்கு அங்கத்துவ நாடுகளுக்கு வழிகாட்டல்களை வழங்குகிறது.

மேலும் பெருந்தோட்டம், தயாரிப்பு, ஆடை மற்றும் பணிகள் துறையின் மிகச்சிறந்த பணியிடங்களுக்கு விருதினை வழங்குவதற்காக சமூக உரையாடல் மற்றும் பணியிடல் ஒத்துழைப்பின் அடிப்படையில் தொழில் தள மட்டத்தில் நாடுமுழுவதுமான போட்டியினையும் தொழிலாளர் தொழில்தருனர் உறவினை விருத்தி செய்வதற்கு சமூக உரையாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களையும் தொழிலாளர் திணைக்களமானது தொடர்ந்தும் நடத்தியிருந்தது.

மேலும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான பல திருத்தங்கள் அல்லது
சட்ட ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கிணங்க ஒப்பந்த வேலைவாய்ப்பினை விரிவுபடுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் 1941ஆம் ஆண்டின் 27ம் இலக்க கூலிகள் நிர்ணயச் சபைச் சட்டத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. மேலும் தொழிற்சாலை கட்டடங்களின் ஒப்புதல்கள் மற்றும் தொழிற்சாலைகளைப் பதிவுசெய்தல்,
நீராவிக் கொள்கலன்கள் மற்றும் ஏனைய நீர்மூழ்கி கப்பல்கனை பதிவுசய்தல், மற்றும் பரிசோதித்தல், அதிக சத்தத்திலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் ஒளியின் பொதுவான தரம் தொடர்பான பல ஒழுக்க விதிகள் வேலைச்சூழலின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை விருத்தி செய்வதற்கு 1942ஆம் ஆண்டின் 45ம் இலக்க தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொழிலாளர் திணைக்களத்திற்கு ஏ,பி,எச் படிவங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தொழில்தருநரை கட்டாயமாக்குவதற்கு 1958ஆம் ஆண்டின் 13ம் இலக்க ஊழியர் சேம நிதியச் சட்டத்தின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 1956ஆம் ஆண்டின் 47ம் இலக்க பெண்களின் வேலைவாய்ப்பு, இளம் ஆட்கள் மற்றும் குழந்தைகள் சட்டத்தின்படி தொழில் வாய்ப்பிற்கான குறைந்தபட்ச வயதுகளை 14 இலிருந்து 16 வயதாக அதிகரிப்பதற்கும் அதற்கு ஒத்திசைவாக கட்டாயக்கல்வியினை 16 வருடங்களாக அதிகரிப்பதற்குமான செயன்முறைகள் செயற்பாட்டில் உள்ளன.

தொழிலாளர் உற்பத்தி திறன்

வேலை செய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு மொத்த பெறுமதி கூட்டலினால் (2010 விலைகளில்) அளவிடப்பட்டவாறான தொழிலாளர் உற்பத்தித்திறன் 2018 இல் வேலை செய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு ரூ.503.04 உடன் ஒப்பிடுகையில் 2019 இல் வேலை செய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு ரூ.513.39 ஆக அதிகரித்தது.

அதன்படி, ஒட்டுமொத்த தொழிலாளர் உற்பத்தித்திறனானது 2018 உடன் ஒப்பிடுகையில் 2019 இல் 2.1 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. வேளாண்மை, கைத்தொழில் மற்றும் பணிகள் ஆகிய அனைத்து மூன்று துறைகளிலும் மொத்த பெறுமதி கூட்டலின் அதிகரிப்பும், வேளாண்மை மற்றும் கைத்தொழில் துறைகளில் வேலைசெய்யப்பட்ட மணித்தியாலங்களின் வீழ்ச்சியும் ஒட்டுமொத்த தொழிலாளர் உற்பத்தித்திறனின் இந்த அதிகரிப்பிற்கு பங்களித்திருந்தன.

உற்பத்தித் திறன் மட்டத்தினைப் பொறுத்தவரையில், பணிகள் துறையானது தொழிலாளர் வளத்தின் அதிக திறமையான பயன்பாட்டினை வெளிக்காட்டியதுடன், வேலைசெய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு ரூ.624.58 உயர் தொழிலாளர் உற்பத்தித்திறன் மட்டத்தினைப் பதிவுசெய்திருந்ததுடன் அதனைத் தொடர்ந்து கைத்தொழில் துறையானது வேலைசெய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு ரூ.540.70 தொழிலாளர் உற்பத்தித் திறன் மட்டத்தினையும் கொண்டிருந்தது.

வேளாண்மை துறையில் தொழிலாளர் உற்பத்தித்திறனில் படிப்படியான அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வேலை செய்யப்பட்ட மணித்தியாலம் ஒன்றிற்கு ரூ.192.87 உடைய ஆகக்குறைந்தளவிலான தொழிலாளர் உற்பத்தித்திறன் மட்டப் பதிவினை வேளாண்மைத் துறை பதிவு செய்திருந்தது.

வேலைவாய்ப்பின் பங்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்த போதிலும், இலங்கையில் வேளாண்மைத் துறையானது இன்னும் அதிக மனித உழைப்பு மிகுந்ததாகக் கருதப்படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில், அதிக உழைப்பினை சார்ந்திருக்கின்றமை மற்றும் வேளாண்மைத் துறையில் வளப் பயன்பாட்டின் திறமையின்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பாரம்பரிய வேளாண்மையிலிருந்து உயர் தொழில்நுட்ப வேளாண்மையை நோக்கி நகர்வது அவசியமானதாகக் காணப்படுகின்றது.

மேலும், சுயதன்னிறைவின்மை மற்றும் இலங்கையில் வேளாண்மை உற்பத்திகள் அதிக செலவினைக் கொண்டிருக்கின்றமை காரணமாக ,லங்கைப் பொருளாதாரமானது சில முக்கிய வேளாண்மை ,றக்குமதிகளில் தங்கியிருக்கின்றமையால் கொவிட் 19 தொற்று நோயின் புதிய சவால் தோன்றிய நிலையில் உலக உணவு வழங்கல் சங்கிலிகளில் ஏற்பட்ட ,டைêறுகளால் முன்பினை விட அதிகமாக இலங்கையில் வேளாண்மை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் தேவை
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதாக இலங்கை மத்திய வங்கியின் 2019ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435