கொவிட் 19 தாக்கத்தால் இவ்வருடம் 10,000 குழந்தைகள் வரை இறக்கலாம்- WHO

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 2020ம் ஆண்டில் சுமார் பத்தாயிரம் சிறுவர்கள் பலியாவர் என்று உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ட்ரெடொஸ் அத்நாம் க்ரெபெய்சிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற விவசாய மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் போஷாக்கின்மையினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இவ்வாண்டு 14 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தென்னாசிய நாடுகளை சேர்ந்தவர்களாகவர். சுமார் 6.7 மில்லியன் பேர் இவ்வாறு பாதிக்கப்படுவார்கள்.

அத்தியவசிய சேவைகள், சிறுவர் போஷாக்கு, குடும்பத் திட்டமிடல் உட்பட பல விடயங்களில் இத்தொற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழைகளை கைவிட்டு செல்வந்ததர்கள் போஷாக்கான உணவை உண்பதை நாம் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- ரொய்டர்ஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435