
கட்டாரில் தொழில்நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்கள் 398 பேர் இன்று (31) நாடு திரும்பினர்.
கட்டார் விமானசேவையின் விசேட விமானத்தினூடாக இன்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.