கொவிட்-19 பரவல் நிலைக்கு மத்தியில், தனியார் துறை ஊழியர்களுக்காக வேதனம் 50 சதவீதமோ அல்லது 14,000 ரூபாவோ என்ற இரண்டில், அதிகூடிய கொடுப்பனவானது, அந்தந்த நிறுவனஙகளில் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்று தொழில் அமைச்சில் நிறுவப்பட்டுள்ள கொவிட்-19 முததரப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தனியார துறையில் ஊழியரகளினால் பணிக்கு சமூகமளிக்க முடியாமை மற்றும் அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி என்பன காரணமாக, அந்த ஊழியர்களுக்கு வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் முன்னதாக இந்தக் குழு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களையும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பிலும் நேற்று ஆராயப்பட்டது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் நேற்று (16) கூடிய இந்தக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், ஊழியர்களின் சார்பில் ஊழியர் சம்மேளன பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விதானகே, தொழிற்சங்கங்களின் சார்பில், லெஸ்லி தேவேந்திர, எண்டன் மார்க்கஸ், சில்வஸ்டர் ஜெயகொடி ஆகியோரும், அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மற்றும் தொழி; ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ரகீர்த்தி உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சுற்றுலா துறையில் 50 சதவீத வேதன முறைமையை தொடர்ந்து பேணவும், தனியார் துறையில், ஏனைய துறைகளுக்காக முழுமையான வேதனத்தை வழங்கவும் தொழில் வழங்குநரகள் வெளியிடும் இணக்கப்பாட்டை அவ்வாறே முன்கொண்டு செல்ல வேண்டும்.
ஏதாவது ஒருவகையில் மாற்றம் பெறும் கொவிட நிலைமையில், ஏதாவது ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சியடையும் அல்லது தொழிலில் ஈடுபடும் ஒரு தரப்பு பணிக்கு சமூகமளிக்காவிட்டால், அவர்களுக்காக மாத்திரம் 50 சதவீத வேதன முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியும்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில், குறித்த நிறுவனம் அந்த நிலைமை தொடர்பில் தொழில் திணைக்களத்திற்கு அறிவித்து, 50 சதவீத வேனததை வழங்க அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.