
வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியிருக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் உள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும் வௌிநாடுகளில் இருந்து வருகைத் தருபவர்களாவர். இதேவேளை தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
வௌிநாடுகளில் இருந்து கொவிட் 19 தொற்று உள்ள நிலையில் நாட்டுக்கு வரவதனால் அவர்களுடன் விமானத்தில் பயணிக்கும் ஏனைவர்கள் பாதிக்கப்படுவது போன்றே விமானநிலைய ஊழியர்களும் தொற்றுக்குள்ளாகும் அபாயம் காணப்படுகிறது என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 71 தனிமைப்படுத்தல் முகாம்களில் 7653 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டில் மீண்டும் கொவிட் 19 பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் திட்டத்திற்கு நடைமுறையொன்றை பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.