
தனியார்துறையில் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் நிபுணத்துவம் பெற்றோரின் சேவையை தொடர்ந்தும் எதிர்காலத்தில் பெறும் நோக்கில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற தொழில் ஆலோசனைச் சபை கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவை அமைச்சர் முன்வைத்துள்ளார். இதற்கு இதற்கு ஊழியர் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.
இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் தொழில் ஆலோசனைச் சபையில் அறிவிப்பதாகவும் அதற்குப் பின்னர் அதற்குரிய சட்ட கொள்கைகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.