
போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் சம்பளத்தின் ஒரு தொகை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்கப்பட்டது.
அதற்கமைய, சாதாரண ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமும், சிரேஷ்ட அதிகாரிகளின் இரு நாள் சம்பளமும் மேலதிக செயலாளர்களின் மூன்று நாள் சம்பளமும் செயலாளர் மற்றும் பொதுச் செயலாளரின் இருநாள் சம்பளமும் இந்நிதியத்திற்கு வழங்கப்படவுள்ளது.
போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சரின் மாத சம்பளம் நேற்றுமுன்தினம் (20) ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது. குறித்த அமைச்சின் நூறு வீத ஊழியர்கள் தமது சம்பளத்தின் ஒரு பகுதியை நிதியத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்த தெரிவித்துள்ளார்.