பட்டதாரிகள் பிரச்சினை குறித்து ஜனாதிபதி கவனத்திற்கு

இதுவரை பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதம் கிடைக்காத அனைவருக்கும் அவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுப்பதாக ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்வதற்கு இதுவரை சுமார் 46,000 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக இன்னும் சுமார் 14,000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனக்கடிதங்களை எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் விரைவில் வழங்கப்படவேண்டும். அவ்வாறின்றி, முதலில் இணைத்துக்கொண்டவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர் ஏனைய 14,000 பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டு பயிற்சி வழங்கப்படுமாக இருந்தால் அது பட்டதாரிகளுக்கு ஏற்படும் பாரிய அநீதியாகும் என குறித்த சங்கத்தின் அழைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக தொழிலுக்காக காத்திருந்த அனைத்து பட்டதாரிகளுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி ஆரம்பிக்கப்படவேண்டும். பயிற்சிக்காக இணைத்துக்கொள்பவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுவதாக குறிப்பிட்ட 20,000 ரூபா கொடுப்பனவை கடந்த 5 மாதங்களுக்கு சேர்த்து வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால திட்டம் என்பன குறித்து கலந்துரையாடுவதற்கு குறித்த சங்கத்தின் மாவட்ட பிரதிநிதிகள் நேற்று (12) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435