அதிபர் ஆசிரியர் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட நேரம் ஒதுக்குவாரா கல்வியமைச்சர்?

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க கோரி கல்வி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.

நீண்ட காலமாகச் சேவை செய்யும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கீழே குறிப்பிடப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக உடனடியாக கலந்துரையாடித் தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக கல்வி அமைச்சின் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுடன் எமது சங்கத்திற்கு உடனடியாகக் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றுத் தாருங்கள் என மிகவும் தேவைப்பாட்டோடு கேட்டுக்கொள்கிறோம்.

1. 23 வருடங்களாகப் பேசு பொருளாக உள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் முதன்மையான சம்பளப் பிரச்சினை தொடர்பாக சம்பள ஆணைக்குழுவின் தீர்மானத்தினை செயல்படுத்த விடாமல் தடுத்தல்.

2. ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் படிவங்கள் நிரப்பும் செயற்பாடுகள்> கட்டாய செயற்றிட்டங்கள் உட்பட மேலதிக வேலைகளை வழங்குதல்.

3. சேவை புரிகின்ற பழைய> மற்றும் புதிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உள்ளகரீதியாகவும் பதவி உயர்வு வழங்கும் போதும் எழுகின்ற பிரச்சினைகள்.

4. இலங்கை ஆசிரியர் சேவையில் மொடியுல்கள் செயற்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

5. ஆசிரியர்களின் கடமைகள்> செயற்பாடுகள் தொடர்பான படிவம் மற்றும் சம்பள திட்டப்படிவம் வழங்குதல் தொடர்பான பிரச்சினைகள்.

6. தேசியப் பாடசாலை> மாகாண பாடசாலை தொடர்பான தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதனை நிறைவு செய்து மீண்டும் இடமாற்றம் பெறும் போது எழுகின்ற பிரச்சினைகள்.

7. வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள்.

8.ஓய்வு பெறுவதற்குள்ள ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்.

9. ஆசிரியர்களின் பிள்ளைகளை பாடசாலைக்குச் சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள்.

10. சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழினப் பிள்ளைகளுக்கு தங்கள் மொழியில் கா.பொ.த.உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை மேம்படுத்திக்கொள்ள பாடசாலைகள் இல்லாமை மற்றும் அந்த வழங்கள் உள்ள பாடசாலைக்குச் செல்ல வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கபடாமை.

11. பாடசாலையின் முதன்மையான மற்றும் பரிபாலனச் செயற்பாடுகளை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடம் வழங்குதல்,பாடசாலையை நடாத்திச் செல்ல பெற்றோர்களிடம் பணம் அறவிடுதல்.
12. ஏனையவை

போன்ற விடயங்கள் கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435