சவுதி அரேபியாவின் ஜெடாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றி வந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டதாக துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதிவரை காரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அவசர சேவைகள் நிமித்தம் தொடர்பு கொள்பவர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சள் ஊடாக தொடர்புகொள்ளுமாறு குறித்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் – [email protected]
கொன்சியூலர் விடயங்கள் – 0549505628
தொழிலாளர் விடயங்கள் – 0503605447