
கட்டுமானப் பணிகள் இடம்பெறும் தளங்களிலேயே தொழிலாளர்களுக்கான தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கான அனுமதியை ஐக்கிய அரபு இராச்சியத்தின் மனித வள அமீரக அமைச்சு வழங்கியுள்ளது.
தொழிலாளர்களுக்கிடையில் பாதுகாப்பான தொலைவை பேணுவதுடன் அச்சுறுத்தலை குறைக்கும் வகையில் இவ்வேற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் தொழிலாளர்களின் போக்குவரத்தினூடாக கொவிட் 19 தொற்று பரவாமல் இருப்பதும் இதன் நோக்கமாகும்.
உள்ளநாட்டு அதிகாரிகள், அமைச்சு மற்றும் மாநகரசபை என்பவற்றுக்கிடையிலான ஒத்துழைப்புடன் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
சட்ட விதிகளுக்கமைய கட்டுமான நிறுவனங்கள் பணியிடங்களில் தங்குமிட வசதிகளை மேறகொள்ளவேண்டும். சமூக இடைவௌி பேணும் வகையிலும் இத்தங்கஞமிடங்கள் அமைக்கப்படவேண்டும். தங்குமிட வசதிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு, சுகாதாரமான தங்குமிட வசதிகள் செய்துக்கொடுக்கப்படுகிறதா என கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளையும் மனித வள அமைச்சு மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.