19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளைய தினம் நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
நீதித்துறையினருக்கு மாத்திரம் 100:300 சதவீத வேதன அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரச சேவையில் வேதன பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இந்த போராட்டடம் இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று அவர்களால் நேற்று (09) கொழும்பில் நடத்தப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிட்ட அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி, நீதித்துறையினருக்கு மாத்திரம் வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் 100:300 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சம்பளப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளது.
இதன் காரணமாக அன்றையதினத்தில் கல்வித்துறை, இறைவரித்திணைக்களம், நீதிமன்றங்கள் உள்ளிட்ட 19 அரச துறைகளின் சேவைகள் பாதிப்படையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.