இஸ்ரேல் பராமரிப்பு சேவை சம்பளம் அதிகரிப்பு

இஸ்ரேலில் பராமரிப்பு பணியில் சேவை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அந்நாட்டு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய அடிப்படை சம்பளமானது Nis 5,300 அல்லது மணித்தியாலத்திற்கு is 28.5 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானம் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மேலும் , இத்தீர்மானத்திற்கு அமைய தற்போது Nis 4650 சம்பளம் பெறுபவர்களுக்கு இம்மாதம் தொடக்கம் Nis 4825 வழங்கப்படும் என்றும் இதுவே எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் Nis 5000 ஆக அதிரிக்கப்படும் என்றும் 2017 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் இச்சம்பளம் Nis 5300 ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பளத்தில் சுகாதார காப்புறுதி, உணவுச் செலவு உட்பட சிறுதொகை பணமே கழிக்கப்படும். இஸ்ரேலில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது பாரிய நன்மையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435