எமது உரிமைக்கான போராட்டத்தை உதாசீனம் செய்யாதீர்!

எமது போராட்டங்களை யாரும் உதாசீனம் செய்யவோ, அவற்றினை மிகவும் கீழான எண்ணம் கொண்டோ நோக்கவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் தொடர்ந்தும் 44 ஆவது நாளாகவும் நடைபெற்றுவருகின்றது.

குறித்த போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமது போராட்டத்தினை தடுத்து நிறுத்துவதற்கு சில சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் எந்த சதித்திட்டம் தீட்டினாலும் தமது உரிமையினைப் பெற்றுக்கொள்ளும் வரையிலும் தமது போராட்டம் தொடரும் என பட்டதாரிகள் கூறியுள்ளனர்.

எமது உரிமையினைக்கேட்டு போராடிவரும் பட்டதாரிகளை நீதிமன்றம் வரையில் இந்த அரசாங்கம் கொண்டுசென்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பிரஜைகள் வீதிகளில் போராட்டங்கள் நடாத்திவருவதை வேடிக்கை பார்ப்பதாகவும் பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையை உறுதிப்படுத்த மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 44வது நாளாக சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435