கோரிக்கைக்கு உரிய தீர்வில்லையேல் 26 முதல் தொடர் வேலைநிறுத்தம்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப் பேச்சாளர் சிந்தக்க பண்டார நேற்று (15) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் பிரதமரின் செயலாளருடன் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதும் இதுவரை சாதகமான தீர்வு எட்டப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அவர் தமது போராட்டத்திற்கு ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச உடமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து துறைசார்ந்தவர்களும் ஒரே குழுவாக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர் கடந்த 2 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக தேங்கிக்கிடந்த தபால்களில் 80 சதவீதமானவை நேற்று விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டி, காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரித்தானியர் கால தபால் நிலைய கட்டிடங்களை சுற்றுலாத்துறைக்கு உள்வாங்கும் தீர்மானத்தை கண்டித்தல், கொழும்பு, தபால் திணைக்கள கட்டிடத்தில் பிரதான தபால் அலுவலகத்தை ஆரம்பிக்காமை, சேவை தொடர்பான யாப்பினை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட சில முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்று தொழிற்சங்க முன்னணி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435