சர்வதேச நிதிநகர நிர்மாணிப்பினூடாக மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்து பேரைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவில் மீனவ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 5 பேரும் அமைச்சு மற்றும் திட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 5 பேரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நகர நிர்மாணிப்புக்காக அடையாளங்காணப்பட்ட நிலப்பகுதி மற்றும் கடற்கரை பிரதேசங்களிலேயே மண் பெறபடுகிறது. குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் மீன்பிடித்துறை சங்கங்களின் பிரதிநிதிகள், மீனவச்சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நேரடியாக பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அனுமதி பெறப்பட்ட போதிலும் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மீன் அறுவடையில் பாதிப்பு ஏற்படுமாயின் அது குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வை பெறுவதற்கும் நட்டஈடுகளை வழங்குவதற்கும் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைத்தளம்