தேசிய பாடசாலைகளில பணியாற்றும் ஆசிரியர்களில் 12,000 பேர் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே பாடசாலையில் பணியாற்றி வருவதாக கல்வியமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள 353 தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் 38,000 ஆசிரியர்களில் 12,000 பேரே இடமாற்றம் வழங்கப்படாது ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் சுமார் மூவாயிரம் பேர் உயர் தர வகுப்புக்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்று பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அவர்களுக்கான இடமாற்றங்களை தேசிய இடமாற்றக்கொள்கைக்கமைய மேற்கொள்ளுமாறும் கல்வியமைச்சிடம் கோரியுள்ளார்.
இவ்வாசிரியர்களுக்கான இடமாற்றங்களை வழங்கும் பொறுப்பை அதிகாரிகளின் பொறுப்பில் விடப்படுமாயின் நெருக்கமானவர்களின் மாற்றங்கள் அவர்களுக்கேற்றாற்போல் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் தேசிய இடமாற்றக்கொள்கைக்கமைய செயற்படுமாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மூலம்- லங்காதீப
வேலைத்தளம்