பேச்சில் இணக்கமில்லை: தொடர்கிறது தொழிலாளர் போராட்டம்

கண்டி – ஹுன்னஸ்கிரிய, எயாபார்க் தோட்ட மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. குறித்த பகுதியைச் சேர்ந்த மடுல்கலை மற்றும் ராக்ஸாவ உள்ளிட்ட சில தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமது வாழ்வாதாரத்தை நீண்ட காலத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகவும், தோட்டக்காணியை பாதுகாக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், உரிய தீர்வு கிடைக்கும் வரை ஓயாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டி – ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள 5 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை தொடர்பில் கொழும்பில் இன்று முத்தரப்புச் சந்திப்பு இடம்பெற்றது.

செங்ககொடி சங்க பிரதிநிதிகள், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், அரச தொழில் முயற்சி அமைச்சரின் பிரதிநிதி, தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் மற்றும் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் செங்கொடிச் சங்கப் பிரதிநிதிகள் இதன்போது விளக்கமளித்தனர்.

இது தொடர்பில் பொது முயற்சியான்மை அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததுள்ளது.

இந்தநிலையில், தங்களின் கோரிக்கை பூரணமாக நிறைவேற்றப்படும் வரையில் தங்களின் போராட்டம் தொடரும் என்று ஹுன்னஸ்கிரிய பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்களுடன் பேச்சு நடத்தாமல் தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது என அரச அதிகாரிகளால் எழுத்து மூலமாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டு வாரங்களுக்குள் அமைச்சர் கபீர் ஹாசிமுடன் பேச்சு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் குறித்த சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச அதிகாரிகளினால் வழங்கப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன், போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435