
விபத்து கொடுப்பனவு மற்றும் வருகை கொடுப்பனவு என்பவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சரணாலய தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல புதிய மிருகக்காட்சிசாலை, ஹம்பாந்தோட்டை சபாரி பூங்கா என்பவற்றிற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் எம்.கே.எஸ் கருணாதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
விபத்து கொடுப்பனவாக தற்போது, 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படுகின்ற நிலையில், அதனை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கோரப்பட்டுள்ளது.
அத்துடன், ஆயிரம் ரூபாவாக வழங்கப்படுகின்ற வருகைக்கான கொடுப்பனவை, 2 ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
இதனை அரசியல்வாதிகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பல மாதங்கள் கடந்துள்ளபோதும், தீர்வு காணப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், இன்றைய தினம் அடையாள போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது என சரணாலய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் எம்.கே.எஸ் கருணாதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தமது பிரச்சினைகளுக்கு 7 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.