வட மாகாண பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 28,29,30ம் திகதிகளில நடைபெறவுள்ளன என்று மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் 176 பேர் பணியாற்றுகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் சேர்த்து 679 பேருக்கு நியமனம் வழங்க ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், வட மாகாண கல்வியமைச்சின் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான முறையில் உடனடியாக நியமனம் வழங்கப்படவேண்டும் என்றும் 679 பேருக்கான அனுமதியானது முழுமையாக தொண்டர் ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப் படவேண்டும் உள்வாங்க பயன்படுத்தப்படவேண்டும் என்றும் கோரியிருந்தோம். இதனடிப்படையில் தற்போது 679 தொ என்றும் கோரப்பட்டிருந்துயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளதோடு 176 ஒப்பந்த ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களிற்கான அனுமதிகள் கோரப்பட்டிருந்தன. இவற்றின் அடிப்படையில் ஆரம்பத்தில் இந்த ஒப்பந்த ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வகையிலேயே 676பேருக்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதிகளே கடந்த மாதம் கிடைத்திருந்த்து.
இருப்பினும் இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சரின் ஊடாக மீண்டும் முயற்சித்தோம் . இதன் அடிப்படையில் ஒப்பந்த ஆசிரியர்களிற்கும் உடனடியாகவே நியமனம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது தனியான ஏற்பாட்டில் இந்த எண்ணிக்கையில் அவர்களிற்கான நியமன எண்ணிக்கையை இணைக்காது தொண்டர் ஆசிரியர்களுக்கே வாய்ப்பை வழங்க அனுமதிக்குமாறு கோரியிருந்தார். அதற்கமைய 679 தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் பெறுவர்
அத்துடன் ஒப்பந்த ஆசிரியர்கள் 176 பேருக்குமான நியமனத்திற்கான வாய்மூலமான ஒப்புதல் கிடைத்தமையினால் அவர்களிற்கான நியமனத்திற்கும் எழுத்துமூலமான அனுமதியை பெறுவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவற்றின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களிற்கான நிரந்தர நியமனமும் விரைவில் வழங்க ஆவண செய்யப்படுகின்றன என்றார்.