பெண்கள் வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும்போது, அவர்களின் குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கை பெற்றுக்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காலியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளமையினால், பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதனால், அவர்களின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்பபடுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு குறித்த அறிக்கை பெற்றுக்கொள்ளப்படுவதைக் கைவிடுவதற்கான அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கைக்கு பதிலாக, வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் குடும்பங்களில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்புக்கு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.