வேலையற்ற பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மாவட்ட ரீதியாக வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சியுடன் கூடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இணைத்துக்கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

தனியார் துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் அடிப்படையில் சேவையில் இணைந்திராத 21-35 வயது வரையான வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் வசிக்கும் மாவட்டம், பிரதேச செயலக காரியாலயம் மற்றும் கிராமசேவகர் பிரிவு என்பவற்றை குறிப்பிட்டு செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மிலோத்தா கட்டிடம், முதலாம் மாடி (பழைய டைம்ஸ் கட்டிடம்), பிரிஸ்டல் வீதி, கொழும்பு 1 என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். கடித உரையின் இடது பக்க மேல் மூலையில் ‘பட்டதாரிகளை பயிற்சியளித்தல்’ என்று குறிப்பிட வேண்டும்.

அல்லது http://www.mnpea.gov.lk என்ன இணையதள முகவரியினூடாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இணையதளமூடாக விண்ணப்பங்களை அனுப்புவோர் பதிவுத்தபாலில் விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அவசியம் இல்லை.

தெரிவு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு அனைத்தும் உள்ளடங்கலாக 20,000 ரூபா மாதச்சம்பளத்துடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பங்களை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைத்தல் வேண்டும்.

 

application

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435