தனிப்பட்ட ரீதியான தகவல்கள், தொழில் விபரங்கள் மற்றும் தொழில் செய்யும் நிறுவன விபரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் கலந்துரையாட வேண்டாம் என்று டுபாய் வாழ் மக்களுக்கு அந்நாட்டு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் யார் யாருடன் தொடர்புபட்டிருக்கிறோம் என்பது குறித்த விபரங்கள் தெளிவாக தெரிந்துக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றமையினால் பாதிப்பு ஏற்படும் என்று கூறியே டுபாய் பொலிஸார் இவ்வறிவுறுத்தலை வெளியிட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் தெரிவித்துள்ள டுபாய் பொலிஸார் சமூக வளைத்தளங்களில் தனிப்பட்ட ரீதியான விபரங்களை வெளியிடுவதனூடாக ஏற்படும் விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதன் ஆபத்து குறித்து மக்கள் ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் நிறுவன தகவல்கள் குறித்து வெளியிடுவது ஆபத்தானது அல்ல என்றே கருதுகின்றனர். எனினும் இதனூடாக நிறுவனத்தின் போட்டித்தன்மை ஏற்படுவதுடன், அடையாளம், அறிவுசார் சொத்து உட்பட இன்னும் பிற இழப்புக்களை சந்திக்க நேரிடலாம் என்று கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அந்நாட்டு மக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்