இனிவரும் காலங்கள் பெற்றுக்கொண்ட பட்டப்படிப்பை தவிர வேறு பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ரத்னாவலி மகளிர் கல்லூரியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் தாம் பட்டம்பெற்ற துறையை தவிர வேறு துறைகளில் கற்பிப்பதற்கான நியமனம் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.