அம்பாறை மாவட்ட வௌிக்கள உத்தியோகத்தர் தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் நேற்று (12) ஈடுபட்டனர்.
வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமையினை சுட்டிக்காட்டியே குறித்த கள உத்தியோகத்தர்களுக்கான தொழிற்சங்கங்கள் அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டன.
விவசாயத் திணைக்களம், கிராம சேவகர் சங்கம், நீர்பாசனத் திணைக்களம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், பொதுச்சுகாதார மருத்துவமாதுக்கள் சங்கம், வௌிக்கள உத்தியோகத்தர்கள் ஒன்றியம் என்பன இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டன.
கடந்த அரசாங்கத்தினால் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அம்பாறை மாவட்ட வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை என்றும் சுமார் ஐந்தாயிரம் வௌிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் தேவையாக உள்ளதாகவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
வேலைத்தளம்