இரு தசாப்தங்களுக்கு பின் நாடு திரும்பும் பிலிப்பைன் நபர்

இரு தசாப்தங்களாக தனது சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் டுபாயில் வாழ்ந்த பிலிப்பைன் பிரஜை மீண்டும் நாடு திரும்ப டுபாய் மற்றும் மத்திய கிழக்கில் வாழும் பிலிப்பைன் புலம்பெயர் தொழிலாளர்கள் உதவி வழங்கியுள்ளனர். இதனையடுத்து தனது 80 வயதான தாயை சந்திப்பதற்காக குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

மத்திய கிழக்கு ஊடகமான எமிரேட்ஸ் 24/7 இந்நபர் குறித்து வெளியிட்ட தகவல்களையடுத்தே மீண்டும் நாடு திரும்ப 60 வயதான பேர்னாடோ பஸ்கோ ஒகம்போவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

டுபாய் அரசு நாட்டை விட்டு செல்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கியதையடுத்து இது வரை நீதிமன்றில் இருந்த பேர்னாடோவின் கடவுச்சீட்டு மீணடும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவர் டுபாயில் 12 வருடங்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்துள்ளார்.

எனது கடவுச்சீட்டை டுபாய் அரசு மீண்டும் கையளித்துள்ளது. ஆனால் ஏற்கனவே காலாவதியாகியுள்ளது. எனக்குதவிய பெருந்தன்மை மிக்க தலைவர்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். வீட்டுக்கு திரும்பும் என் கனவு தற்போது நனவாகியுள்ளது. அதனை எமிரேட்ஸ் 24/7 நிறைவேற்றியுள்ளது என்று மிக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435